ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்; ஏமாற்று நாடகமா? – தென் ஆப்பிரிக்காவில் அதிர்ச்சி!

வெள்ளி, 25 ஜூன் 2021 (10:44 IST)
தென் ஆப்பிரிக்காவில் ஒரே பிரசவத்தில் பெண் ஒருவர் 10 குழந்தைகள் பெற்றதாக வெளியான செய்தி பொய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சித்தோல் என்ற பெண் கர்ப்பமாக இருந்த நிலையில் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்ததாக உலகம் முழுவதும் செய்தி அந்த பெண்ணின் புகைப்படத்தோடு வைரலானது. அதை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து ட்ரெண்ட் செய்து வந்தனர்.

இந்நிலையில் அந்த சம்பவம் பொய் என்று தென் ஆப்பிரிக்க அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதில் சித்தோல் கர்ப்பமாகவும் இல்லை, அவருக்கு 10 குழந்தைகள் பிறக்கவும் இல்லையென்றும், அவரது மனநலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்