பாக்தாத் விமான நிலையத்தை தாக்கிய திடீர் ராக்கெட்டுகள்!

வெள்ளி, 3 ஜனவரி 2020 (08:23 IST)
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள விமான நிலையத்தை வானத்திலிருந்து திடீரென ராக்கெட்டுகள் சில வந்து தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பல நாட்டு மக்களும் வந்து செல்லும் பன்னாட்டு விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல செயல்பட்டு கொண்டிருந்த விமான நிலையத்தில் திடீரென மூன்று ராக்கெட்டுகள் விழுந்து வெடித்தன. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு காரணம் யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஈராக்கில் அமெரிக்க தூதரகம் சூறையாடப்பட்டதற்கு ட்ரம்ப் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்