ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையே மோதல்! – அவசர ஆலோசனையில் ஐ.நா சபை!
ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (08:55 IST)
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அரசியல் ஸ்திரத்தன்மை குலைந்து வரும் நிலையில் ஐ.நா சபை அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் நாட்டின் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையே மோதல் எழத் தொடங்கியுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது. இதனால் சோமாலியாவில் புரட்சி ஏற்பட்டு ஆட்சி கலைந்து மேலும் மோசமான சூழல் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து ஐ.நா.வின் சிறப்பு தூதர் ஜேம்ஸ் ஸ்வான் கவலை தெரிவித்துள்ளதுடன், ஐ.நா சபை இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டியதும் அவசியம் என கூறியுள்ளார்.