6 சீன நிறுவனங்களுக்கு தடை: அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை..!

ஞாயிறு, 19 பிப்ரவரி 2023 (16:46 IST)
ஆறு சீன நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
அமெரிக்காவில் சமீபத்தில் சீனாவின் உளவு பலூன் பறந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திநிலையில் சீன ராணுவத்தின் நவீன மயமாக்களுக்கு ஆதரவாக செயல்பட்ட ஆறு சீன நிறுவனங்களுக்கு தடை விதித்து அமெரிக்கா உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
5 சீன நிறுவனங்கள் மற்றும் ஒரு சீனாவின் ஆய்வு நிறுவனம் என ஆறு சீன நிறுவனங்களை அமெரிக்க வர்த்தகத்துறை தடை பட்டியலில் சேர்த்து உள்ளது. இதனால் சிறப்பு உரிமம் என்று அமெரிக்காவின் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை சீன நிறுவனங்களுக்கு விற்பனை செய்வது தடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த ஆறு நிறுவனங்களும் சீனாவின் உளவு பணிகளுக்கு விண்கப்பல்கள் மற்றும் பலூன்கள் தயாரித்து கொடுக்கும் திட்டங்களில் செயல்பட்டதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்