சிவன் சிலை முன்பு நரபலி? வீடியோ வெளியாகி பரபரப்பு

புதன், 17 ஆகஸ்ட் 2016 (14:41 IST)
சுவிட்சர்லாந்தில் சிவன் சிலை முன்னால் நரபலி கொடுப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.


 

 
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா நகரில் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி அலுவலகத்திற்கு அருகில் சிவன் சிலை இன்று உள்ளது. சில தினங்களுக்கு முன்னால் யுடியூபில் வெளியானது.
 
அந்த வீடியோவில் கருப்பு உடை அணிந்த சிலர் சிவன் சிலையை சுற்றி வருகின்றனர். பின் அந்த கூட்டத்தில் இருந்த ஒரு பெண் கீழே படுக்கிறார். அப்போது ஒருவர் கத்தியால் அந்த பெண்ணை வெட்டுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
 
இதை யாரோ ஒருவர் தூரத்தில் இருந்து படம் பிடித்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சி இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஐரோப்பிய அணு ஆராய்ச்சி துறை அதிகாரிகள் இதனை முற்றிலுமாக மறுத்துள்ளனர்.
 
இதுகுறித்து பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த அதிகாரிகள், இந்த அலுவலகத்திற்கு மாணவர்கள் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். மாணவர்கள் நகைச்சுவைக்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
 
சிவன் சிலை முன்னால் யாரும் நரபலி கொடுக்கவில்லை. இத்தகைய செயலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, தெரிவித்துள்ளனர்.
 
நன்றி: Abadi Armiza    

வெப்துனியாவைப் படிக்கவும்