இன்று பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா, 'முந்தைய அரசில் 600 மீனவர்கள் சுடப்பட்டனர். ஆனால் மோடி ஆட்சியில் அவை பெருமளவு குறைந்து விட்டது. பிரிட்ஜோ படுகொலையை விடுதலைப்புலிகளின் கைக்கூலிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் ஏன் செய்திருக்கக்கூடாது? என்று கேள்வி எழுப்பினார்.
தமிழக மீனவர்கள் இந்திய எல்லையில் தான் மீன் பிடிக்கிறோம் ஆனாலும் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து, படகுகளையும் பறிமுதல் செய்கின்றது என கூறிகின்றனர். மீனவர்களிம் வாழ்வாதாரமும், வாழ் உரிமையும் பெரும் கேள்விக்குறியாகி இருக்கும் நிலையில் ஹெச். ராஜாவின் இந்த கருத்து சமூக ஆர்வலர்களையும், மீனவர்களிடமும் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.