பணிப் பெண்களை விற்பனை செய்யும் வணிக வளாகம்

வெள்ளி, 4 ஜூலை 2014 (21:26 IST)
சிங்கப்பூரில் உள்ள பிரபல வணிக வளாகம் ஒன்றில் பணிப் பெண்கள் விற்பனை செய்யப்படுகின்றனர்.

சிங்கப்பூரில் உள்ள பிரபல வணிக வளாகம் ஒன்றில் விற்பனைப் பொருட்களைப் போல் பணிப் பெண்களை காட்சிப்படுத்தி விற்கும் கொடூர செயல் நடைபெறுகிறது.

சிங்கப்பூரில் உள்ள புக்கிட் திம்மா வணிக வளாகத்தில் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மியான்மர் முதலிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள், ‘வீட்டு வேலையாளர்’, ‘குழந்தைகள் அல்லது முதியோர்களை பராமரிப்பவர்’, 'குடும்பத்தை நிர்வகிப்பவர்’ என்னும் விளம்பரப் பெயர் பலகையுடன் வரிசையாக நிற்க வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த வணிக வளாகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தங்களின் உழைப்புத் திறனை காட்டும் வகையில் இந்தப் பெண்கள், துணிகளுக்கு இஸ்திரி போடுதல், குழந்தை பொம்மைகளைத் தொட்டிலில் போட்டு ஆட்டுதல், முதியோர் அமரும் சக்கர நாற்காலிகளை தள்ளுதல் உள்ளிட்டவற்றை ஒத்திகைக்காக செய்யவைக்கப் படுகின்றனர்.

இவர்களில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பணிப்பெண்கள் அதிக அளவில் விலை போவதாக கூறப்படுகிறது. பிரச்சனைக்குரியவர்கள் என்று கருதப்படுவதால் மியான்மர் நாட்டு பணிப்பெண்கள் போதய அளவு  விற்பனை ஆவதில்லை என்று கூறப்படுகிறது.

இவ்வாறு மனிதர்கள் விற்பனை செய்யப்படுவது, மனித உரிமை ஆர்வளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்