ஓட்டுநர் இல்லாத கார் சேவை: உலகிலேயே முதல் முறை

சனி, 22 அக்டோபர் 2016 (12:54 IST)
உலகிலேயே முதல்முறையாக ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்கும் வாடகைக் கார் சேவையை சிங்கப்பூர் நாடு தொடங்கியுள்ளது.
 

 
கார் ஓட்ட தெரியாதாவர்கள் இனி பயப்பட தேவையில்லை. ஓட்டுநர் இல்லாத காரை தற்போது சிங்கப்பூர் நாடு கண்டுபிடித்து உள்ளது. பயணிகள் தங்களது ஸ்மார்ட்போனில் நுடோனமி [nuTonomy] என்ற மென்பொருளை பொருத்துக் கொண்டால் போதும். தானியங்கி வாகனத்தை நீங்கள் சாதரணமாக இயக்க முடியும்.
 
கூகுள் மற்றும் வால்வோ உள்ளிட்ட பல நிறுவனங்கள் தானியங்கி வாகனச் சேவையை பல ஆண்டுகளாக சோதனை முறையில் இயங்கி வருகிறது. நுடோனமி நிறுவனம்தான் முதன் முறையாக பொதுமக்கள் சேவைக்கு கொண்டுவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
சிங்கப்பூரில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில், சில வாரங்களுக்கு இந்த தான்யங்கி வாகனங்களை இயக்க உபேர் கால் டாக்ஸி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்