பெண் ஊழியரை மிருகத்தனமாக அடித்த கொடூர மேனேஜர் [வீடியோ]

வியாழன், 9 ஜூலை 2015 (10:18 IST)
பணியை விட்டு வெளியேற போகிறேன் என்று கூறிய சக பெண் ஊழியரை அந்நிறுவனத்தின் மேலாளர் கொடூரமாக அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நியூயார்க்கில் உள்ள ஒரு உணவு விடுதியில் வேலை பார்த்து வந்த பெண் ஊழியர் தன் மேலாளரிடம் சென்று தனக்கு இந்த வேலை பிடிக்காததால் நின்று விடுகிறேன் என்று குமறியுள்ளார். இதற்கு கடும் கோபமடைந்த மேலாளர் அப்பெண் ஊழியரை கடுமையாக தாக்கியுள்ளார்.
 
மேலும் பெண் ஊழியரை கொடூரமாக அடித்து முகத்தில் குத்தி தாக்கியுள்ளார். இந்த கொடூர சம்பவத்தை வீடியோ எடுத்த ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவேற்றிவிட்டார். காட்டு தீ போல் பரவிய இவ்வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வீடியோ:
 

வெப்துனியாவைப் படிக்கவும்