பதாவி மீதான தண்டனையை சவுதி உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது

ஞாயிறு, 7 ஜூன் 2015 (17:01 IST)
இஸ்லாத்தை இழிவுபடுத்தியதாக தீர்ப்பளிக்கப்பட்ட வலைப்பதிவாளர் ராய்ஃப் பதாவிக்கு வழங்கப்பட்ட 10-ஆண்டு சிறைத்தண்டனையையும் 1000 கசையடிகளையும் சவுதி உச்ச நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.
 
இந்த ஆண்டின் முற்பகுதியில் பதாவிக்கு 50 கசையடிகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு உலகெங்கிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியிருந்தது.
 
அதன் பின்னர் சவுதி அதிகாரிகள் கசையடியை நிறுத்திவைத்துவிட்டு, தண்டனையை மீளாய்வுக்காக அனுப்பியிருந்தனர்.
 
முழுத் தண்டனையையும் வழங்கினால் அவர் உயிரிழப்பார் என்று அவரது மனைவியும் மனித உரிமை ஆர்வலர்களும் எச்சரித்திருந்தனர்.
 
சவுதி சமூகத்தின் பாரம்பரிய நம்பிக்கைகள் சிலவற்றை கேள்விக்குட்படுத்தும் வகையில் இணைய வலைத்தளம் ஒன்றை நிறுவியதாக குற்றம்சாட்டப்பட்டு பதாவி கைதுசெய்யப்பட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்