இலங்கை சாந்தனின் உடல் அடக்கம்: ஊர்வலமாக சென்று தமிழர்கள் அஞ்சலி..!

Mahendran

செவ்வாய், 5 மார்ச் 2024 (11:17 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த சாந்தன் கடந்த 2022 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில் அவர் உடல்நலம் பாதிப்பு காரணமாக கடந்த ஜனவரி மாதம் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
 
 அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் பிப்ரவரி 29ஆம் தேதி சிகிச்சையின் பலனின்றி காலமானார்.  சாந்தன் இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்த நிலையில் அவர் காலமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில் சாந்தன் உடல் விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டது. இலங்கையில் உள்ள வல்வெட்டித்துறையில் என்ற பகுதியில் அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர் 
 
அதன் பின்னர் வெள்ளங்குளம் என்ற மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்