தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான படம் ஜெயிலர். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மிர்னா மேனன், சிவராஜ்குமார், விநாயகன், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வாசன் ரவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்த நிலையில், இப்படத்தில் நடிப்பதற்கு அவருக்கு ரூ.1 கோடி முதல் ஒன்றரை கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும், இப்படமும்,இப்படத்தில் இவர் ஆடிய காவாலா பாடலும் பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், அடுத்த படத்தில் நடிக்க நடிகை தமன்னா ரூ.5 கோடி சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.