பேட்டரிகள் வெடிப்பதால் போன்களை திரும்ப பெறும் சாம்சங்

ஞாயிறு, 4 செப்டம்பர் 2016 (21:49 IST)
சாம்சங் கேலக்சி நோட் 7 போன்களில் பேட்டரிகள் வெடிப்பதாக புகார்கள் எழுந்ததையடுத்து அந்த போன்களை சாம்சங் நிறுவனம் திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.


 

 
கடந்த மாதம் புதிதாக வெளிவந்த சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி நோட் 7 மிகவும் பிரபலமடைந்தது. இந்த போன் இந்தியாவில் ரூ.60,000 ஆகும். சிறிது நாட்களிலே போன்களை சார்ஜ் செய்யும் போது அதிக வெப்பமாகி பேட்டரிகள் வெடிப்பதாக பல்வேறு பகுதிகளில் இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
 
இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் இந்த மொபைல்  போன்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது.
 
அதைத்தொடர்ந்து அனைத்து கேலக்சி நோட் 7 மாடல் போன்களையும் சாம்சங் நிறுவனம் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்