ரத்தத்தால் குரான் எழுதிய சதாம் ஹுசைன்!!

சனி, 29 ஏப்ரல் 2017 (11:27 IST)
சதாம் ஹுசைன் பெரிய அளவிலான மசூதிகளை கட்டுவதில் விருப்பம் கொண்டவர். பாக்தாதில் உள்ள உம் அல் குரா (Umm al-Qura) மசூதியும் அதில் ஒன்று.


 
 
2001 ஆம் ஆண்டு, வளைகுடா போரில் சதாம் ஹுசைன் வெற்றி பெற்ற பத்தாவது ஆண்டு வெற்றி விழாவிற்காக கட்டப்பட்ட இந்த மசூதி. 
 
43 நாட்கள் தொடர்ந்த ஆபரேஷன் டெஸர்ட் ஸ்டாமை நினைவுப்படுத்தும் வகையில் 43 மீட்டர் உயரத்திற்கு இந்த மசூதியின் ஸ்தூபிகள் கட்டப்பட்டன.
 
மேலும், சதாம் ஹுசைன் கட்டிய மசூதியில், அவருடைய ரத்தத்தினால் எழுதப்பட்ட குரான் வைக்கப்பட்டுள்ளது. 605 பக்கங்களில் எழுதப்பட்ட அந்த நூலை எழுத சதாம் ஹுசைன் மொத்தம் 26 லிட்டர் ரத்தத்தை கொடுத்ததாக அந்த மசூதியின் மதகுரு தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்