ரத்த ஆறு: ரசாயன மாற்றம்

வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (12:05 IST)
சைபீரியாவில் டல்டிகான் என்ற நதி திடீரென்று ரத்த சிவப்பு நிறத்தில் மாறியது. இதற்கு காரணம் நிக்கல் ரசாயன ஆலை என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.


 

 
சைபீரியாவின் வட பகுதியில் உள்ள் ஏராளமான மக்களுக்கு பாசன வசதி மற்றும் குடிநீர் ஆதரமாக விளங்குவது டல்டிகான் என்ற நதி. இந்த நதியில் இருந்து தான் ரசாயன ஆலைகள் தண்ணீர் சேகரித்து வருகின்றனர்.
 
இந்த நதி திடீரென்று ரத்த நிறத்தில் மாறியுள்ளது. இதைக்கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உலகத்தில் தலைசிறந்த நிக்கல் ஆலை நிறுவனத்தில் ஒன்றான நாரில்சிக் என்ற நிறுவனத்தால் இந்த மாற்றம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த காரணத்தை தெரிவித்துள்ள அந்நிறுவனம் நிக்கல் ஆலையில் ஏற்பட்ட விபத்தினால்தான் நதியில் நிக்கல் ரசாயனம் கலந்தது என்று கூறியுள்ளனர். 
 
மேலும் ரஷியா நிக்கல் உற்பத்தியில் உலகத்தில் இரண்டாவது பெரிய நாடாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்