சமீபத்தில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 233 பயணிகளுடன் ஏர் பஸ் 312 என்ற விமானம் கிரீமியா என்ற பகுதிக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட ஒரு சில நொடிகளில் பறவை கூட்டம் ஒன்று திடீரென விமானத்தின் எஞ்சின் மீது மோதியதால் விமானத்தின் என்ஜின் பகுதியில் லேசான தீ ஏற்பட்டது. இதனால் விமானம் திடீரென ஆட்டம் கண்டது. இந்த நிலையில் சாமர்த்தியமாக செயல்பட்ட இந்த விமானத்தின் விமானி உடனடியாக அருகில் இருந்த சோளக்காடு ஒன்றில் பத்திரமாக தரையிறக்கினார். இதனை அடுத்து அதில் உள்ளவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்
விமானி மட்டும் இதனை கவனிக்காமல் இருந்தால் விமானம் தீப்பிடித்து விமானமே வெடித்திருக்க வாய்ப்புகள் இருந்து. ஆனால் விமானியின் லாவகமான செயல்பாட்டால் அனைத்து பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது. ஒரு சில பயணிகளுக்கு மட்டும் சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. இக்கட்டான சூழ்நிலையில் விவேகத்துடன் செயல்பட்ட விமானிக்கு ரஷ்ய அரசும், சமூக வலைதளங்களின் பயனாளிகளும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்