ரஷ்யா, உக்ரைன் மீது தொடுத்துள்ள போரினால் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 100 டாலருக்கு மேல் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. இதனால் உலக நாடுகளில் பெட்ரோல்- டீசல் விலை லிட்டருக்கு 7 முதல் 8 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புய்ள்ளதாகவும் கூறப்படுகிறது.
துருக்கி நாடு உக்ரைனுக்கு ஆதரவு அளித்து, ரஷ்யாவின் அ நீதியான போர் எனக் குறிப்பிட்டுள்ளது. ஜெர்மன் ,பிரான்ஸ் நாடுகள் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேபோல் அமெரிக்கா நாடு, ரஸ்யா பின்விளைவுகளைச் சந்திக்கும் என எச்சரித்துள்ளது.