போலி ரிவ்யூ எழுதியவருக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்: நீதிமன்றம் உத்தரவு

வெள்ளி, 17 டிசம்பர் 2021 (11:46 IST)
யூடியூபில் ரிவ்யூ என்ற பெயரில் தற்போது ஆயிரக்கணக்கானோர் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பதும் ஒரு திரைப்படம் வெளியாகி ஒரு சில மணி நேரத்தில் ரிவ்யூ எழுதி அந்த திரைப்படத்தின் வசூல் அதிகரிக்கவோ அல்லது காலி செய்யவோ ரிவ்யூ உதவுவதாகக் கூறப்படுகிறது 
 
இந்த ரிவ்யூ காரணமாக தற்போது திரைப்படங்கள் மட்டுமின்றி அனைத்து துறையினரும் பெரும் அச்சத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த உணவகம் குறித்து இணையதளத்தில் போலியாக ரிவ்யூ எழுதிய நபருக்கு எதிராக அந்த ஹோட்டல் நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது 
 
இந்த வழக்கின் முடிவில் போலியாக ரிவ்யூ எழுதிய இணையதள உரிமையாளருக்கு ரூ 7.5 லட்சம் அபராதம் விதித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் தமிழகத்திலும் போலியாக சினிமா விமர்சனங்கள் செய்பவர்கள் மீது வழக்கு தொடுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்