அமெரிக்கா vs ஈரான்... போருக்கு தயரா? அதிபர் ஹசன் ரவுகானி பேச்சு!!

சனி, 18 ஜனவரி 2020 (09:01 IST)
ராணுவ மோதல் அல்லது போரைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளில் ஈரான் ஈடுபட்டு வருகிறது என அதிபர் ஹசன் ரவுகானி கூறியுள்ளார்.
 
ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல் சமீபத்தில் உலகநாடுகளை அச்சுறுத்தும் ஒன்றாக அமைந்துள்ளது. ஈரான் - அமெரிக்கா மோதலால் கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. 
 
இந்நிலையில் ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி, போரில் தங்களுக்கு விருப்பமில்லை என பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளத்தின் மீதான தாக்குதல், ஈரான் ராணுவ படைத்தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு இழப்பீடு என கருதுகிறோம். 
 
ராணுவ மோதல் மற்றும் போரைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளில் ஈரான் அரசு தினமும் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இன்னும் சாத்தியக்கூறுகள் உள்ளன என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்