இனி உணவை வீணாக்கினால் அபராதம் செலுத்தவேண்டும்

திங்கள், 12 மே 2014 (11:43 IST)
பிரான்சு மற்றும் ஜப்பானில் உள்ள உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அவர்கள் ஆர்டர் செய்யும் உணவை வீணாக்கினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. உலகெங்கும் அதிக அளவில் உணவு வீணாக்கப்படுவதாகவும், ஆண்டுக்கு ஆண்டு இந்த அளவு அதிகமாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த நிலை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரான்சு மற்றும் ஜப்பானில் உள்ள இரு  உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அவர்கள் ஆர்டர் செய்யும் உணவை வீணாக்கினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
 
பிரான்சில் உள்ள உணவகத்தில், இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கும் வகையில் உணவகம் முழுவதும் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதே போல ஜப்பானில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு குறிப்பிட்ட உணவை வீணாக்குபவர்களின் பில்லில் கூடுதலாக 20 டாலர்கள் வசூலிக்கப்படுகிறது. 
 
Tsukko Meshi, என்னும் அந்த உணவை பல அரிதான பொருட்களை வைத்து தயாரிப்பதாகவும், அதனை வீணாக்கினால் அபராதம் செலுத்தவேண்டும் என்பதை மக்கள் உணர்ந்துவருவதாகவும் உணவக ஊழியர்கள்  தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்