டுவிட்டரில் இருந்து பணி நீக்கம்;பராக் அகர்வாலுக்கு இழப்பீடு ₹346 கோடி!

வெள்ளி, 28 அக்டோபர் 2022 (16:38 IST)
உலகின் டாப் பணக்கார்களின் முதலிடத்தில்  உள்ளவர் எலான் மஸ்க்.இவர் இன்று டிவிட்டரை வாங்கியுள்ள்ள  நிலையில் , அதன் சி.இ.ஓ. பராக் அகர்வாலை பணி நீக்கம் செய்துள்ளார். இதன் மூலம் அகர்வாலுக்கு ரூ.436 கோடி இழப்பீடு கிடைக்கும் என தகவல் வெளியாகிறது.

சமீபத்தில், இவர், டுவிட்டர் நிறுவனத்தை வாங்க முடிவு செய்தார் என்பதும் அதன் பின் டுவிட்டரில் போலி கணக்குகள் அதிகமாக இருப்பதால் அதை வாங்குவதில் இருந்து பின்வாங்கினார்.

இந்நிலையில் எலான் மஸ்க்கிற்கு எதிராக டுவிட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்த நிலையில், டுவிட்டரை 54.20 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்க கடந்த வாரம் எலான் மஸ்க் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுப்படி, இன்றைக்குள்( அக்-28)   இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என கெடு விதித்திருந்தது.

இந்த நிலையில், இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, அதிகாரப்பூர்வமாக டுவிட்டரை வாங்கியுள்ளார் எலான் மஸ்க்.

அத்துடன், எலான் மஸ்க், டுவிட்டரில், நான்கு உயர் அதிகாரிகளின் பணிநீக்கம் செய்துள்ளதாகக்   கூறப்படுகிறது. நீக்கப்பட்ட ட்விட்டர் நிர்வாகிகளில் அகர்வால், காடே, தலைமை நிதி அதிகாரி நெட் செகல் மற்றும் பொது ஆலோசகர் சீன் எட்ஜெட் ஆகியோர் அடங்குவர்.

இந்த  டுவிட்டர் என்ற சமூக வலைத்தளத்தின் இணை நிறுவனர் ஜாக் டோர்சி பதவி விலகியதை அடுத்து, கடந்த ஆண்டு நவம்பரில் அகர்வால் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஐஐடி பாம்பே மற்றும் ஸ்டான்போர்ட் முன்னாள் மாணவர் ஆவார்.

டுவிட்டரை வாங்கிய முதல் நாளே அந்நிறுவனத்தின்  சி.இ.ஓஅகர்வாலை பணி நீக்கம் செய்துள்ள எலானின் செயலுக்கு பலரும் விமர்சனம் கூறி வரும்  நிலையில்,  பாராக் அகர்வாலுக்கு இழப்பீடாக ரூ.346 கிடைக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்