ராஜபக்சேவின் மூத்த மகன் மீண்டும் கைது: போலீசார் அதிரடி

செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (10:10 IST)

முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மூத்த மகன் நமல், அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் ரூ.4,225 கோடி நிதி முறைகேடு செய்ததாக கடந்த மாதம், கைது செய்யப்பட்டு, 7 நாட்கள் சிறையில் இருந்த பின் ஜாமீனில் விடுதலையானார்.
 


 



இந்நிலையில், நமல் மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் நிதி குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படுவார் என அவரது வக்கீல் தெரிவித்துள்ளார். 

ராஜபக்சேயின் தம்பி பசில் ராஜபக்சேவும் இதுவரை 3 தடவை கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்