ஆளுநராக பதவியேற்க வாங்க! – முத்தையா முரளிதரனுக்கு ராஜபக்ஷே அழைப்பு!

புதன், 27 நவம்பர் 2019 (19:11 IST)
இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்துக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் ஆளுநராக நியமிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கை கிரிக்கெட் அணியில் சுழல்பந்து வீச்சாளராக ஜொலித்த முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன். இந்திய தமிழரான முத்தையா முரளிதரன் அதிபர் ராஜபக்‌ஷேவுக்கு ஆதரவாக பேசி வந்தவர்.

தற்போது இலங்கையில் நடந்த தேர்தலில் ராஜபக்‌ஷே சகோதாரர்கள் வெற்றி பெற்றதற்கு நேரடியாகவே வாழ்த்துக்கள் கூறியிருந்தார் முத்தையா முரளிதரன். இந்நிலையில் இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாண பகுதிக்கு ஆளுநராக முத்தையா முரளிதரன் பதவியேற்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதற்கு வடக்கு மாகாண மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதிபர் ராஜபக்‌ஷே பதவியேற்க முத்தையா முரளிதரனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதனால் முத்தையா முரளிதரன் ஆளுனராக நியமிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்