கடந்த செப்டம்பர் மாதம் முதலே ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா ஆகிய பகுதிகளில் காட்டுத் தீ பரவி வருகிறது. இதனால் 100 கோடி விலங்குகள் பலியாகியுள்ளன. 2 ஆயிரம் வீடுகள் எரிந்து தரைமட்டமாயின. மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகினர்.
இந்த அசகாய காட்டுத் தீயால் 1 கோடி ஹெக்டேர் நிலப்பரப்பு கருகி சேதமடந்தன. இந்நிலையில் காட்டுத் தீ பரவிய இடங்களில் தீடீரென மழை பெய்தது தீயின் தாக்கத்தை மட்டுப்படித்தியுள்ளது. ஆதலால் தீயணைப்பு வீரர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இது குறித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை, சூறாவளி காற்று, வெப்ப காற்றின் தரத்தை மாற்றியுள்ளது எனவும், இந்த வார இறுதியில் மேலும் மழை பெய்யகூடும் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.