10,000 தேனீக்களை கர்ப்ப வயிற்றில் வைத்து போட்டோஷூட் நடத்திய கர்ப்பிணி: அதிர்ச்சி புகைப்படங்கள்

திங்கள், 6 ஜூலை 2020 (21:42 IST)
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகணத்தை சேர்ந்த பெத்தானி கருலக்-பேக்கர் என்ற கர்ப்பிணி பெண் தனது வயிற்றில் 10,000 தேனீக்களுடன் நடத்திய போட்டோஷூட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
முதல் குழந்தையை பெற்றெடுக்கும் தாய் தனது கர்ப்பக்காலத்தில் விதவிதமான புகைப்படங்களை எடுக்க ஆசைப்படுவது இயல்புதான். ஆனால் இவர் 10 ஆயிரம் தேனீக்களை தனது வயிற்றில் படரவிட்டு போட்டோஷூட் எடுத்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
இவர் கடந்த சில ஆண்டுகளாக தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், ராணி தேனீ தனது வயிற்றில் பிணைக்கப்பட்டுள்ளதால் எந்தவித பயமும் இல்லை என்றும் இந்த போட்டோஷூட்டை எனது மருத்துவரின் ஆலோசனைக்கு பின்னரே எடுத்ததாகவும் அறிவித்துள்ளார்
 
இந்த கர்ப்பிணி பெண் ஏற்கனவே ஒருமுறை கருச்சிதைவு என்பதும், அப்படியிருந்தும் இந்த கர்ப்பத்தில் இந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்துள்ளதற்கு நெட்டிசன்கள் தரப்பில் இருந்து கண்டனங்கள் குவிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
தேனீ வளர்ப்பில் நீங்கள் கைத்தேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் குழந்தையின் நலனிலும் கவனம் செலுத்த வேண்டும் என ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் இந்த கர்ப்பிணிக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்