பஸ்ஸை என்னவாக மாற்றியுள்ளார் தெரியுமா பிரபல நடிகை : வைரல் தகவல்

செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (19:01 IST)
மத்திய அமெரிக்க நாடுகள் மற்றும் மெக்ஸிகோவில் இருந்தும் நிறையப்பேர் அமெரிக்காவுக்கு  பிழைப்புத் தேடி வந்த வண்ணம் உள்ளனர்.ஆனால் அமெரிக்காவுக்கு செல்ல விரும்பும் அகதிளை புலம் பெயர விடாமல் மெக்சிகோ எல்லையிலேயே அதிகாரிகள் தடுத்து நிறுத்திவிடுகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்னர், ஒரு குடும்பத்துடன் மெச்க்சிகோவிலிருந்து  ஆற்றைக் கடந்து அமெரிக்காவுக்கு வர  முயன்றபோது  தந்தையும், மகனும் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் பரப்ரப்பு ஏற்பட்டது.
 
இந்நிலையில் வீடுகள் இல்லாமல், தவிக்கும் அப்பாவி மக்களை தற்காலிக முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.இங்குள்ள குழந்தைகள் கல்வி பெற முடியாமல் உள்ளனர். இந்நிலையில் கல்வி பெற இயலாமல் தவிக்கும்  குழந்தைகளுக்கு நடிகை எஸ்டிஃபானியா கல்வி கற்பித்து வருகிறார்.
இதற்காகவே தனது பேருந்தை வகுப்பறையாக மாற்றி YES WE CAN என்ற பெயரில் வகுப்பு நடத்தி வருகிறார். இவ்விதம்  சேவை மனப்பான்மை முறையில் ஈடுபடும் நடிகை  எஸ்டிஃபானியா  கற்பிக்க, அவரிடம் , 5  வயது முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகள் கல்வி கற்றுவருகின்றனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்