அமெரிக்கா சென்றடைந்தார் போப் பிரான்சிஸ்

புதன், 23 செப்டம்பர் 2015 (08:08 IST)
கியூபா பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா சென்றடைந்த போப் ஆண்டவருக்கு அதிபர் பாரக் ஒபாமா சிறப்பான வரவேற்பு அளித்தார்.


 
 
உலக கத்தோலிக்க மதத் தலைவரான போப் பிரான்சிஸ்  கியூபா மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகளுக்கு  6 நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
 
தனது சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக கடந்த 19 ஆம் தேதி கியூபா சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கியூபாவின் முன்னாள் அதிபரான பிடல் காஸ்ட்ரோவை போப் பிரான்சிஸ் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அப்போது போப் பிடலுக்கு பரிசுகளை வழங்கினார்.
 
இந்நிலையில்  தனது கியூப பயணத்தை முடித்துக் கொண்ட போப் ஆண்டவர், அமெரிக்கா சென்றடைந்தார்.  மேரிலேண்டில் உள்ள ஆண்ட்ரூஸ் விமான நிலையத்திற்கு வந்த அவரை, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வரவேற்றார்.கடந்த 50 ஆண்டுகால இடைவெளியில் அமெரிக்காவுக்கு செல்லும் போப் ஆண்டவர் என்ற பெருமை இந்த பயணத்தின் மூலம் போப் பிரான்சிஸ் பெற்றுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்