அமெரிக்காவின் மினசொட்டா மாகாணத்தில் ஜார்ஜ் ப்ளாய்ட் என்ற கருப்பினத்தவரை அம்மாகாண காவலர்கள் வன்முறையாக நடத்தியதால் அவர் இறந்தார். போலீஸாரின் இந்த செயலை கண்டித்து மினசோட்டாவில் போராட்டம் வெடித்தது. அதை தொடர்ந்து நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், டெல்லாஸ் என அமெரிக்காவின் பல மாகணங்களிலும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக அதிபர் ட்ரம்ப் ஆளுநர்களை சாடியுள்ளார். கலவரத்தை அவர்கள் கட்டுப்படுத்த தவறியதாகவும், கலவரத்தை கட்டுப்படுத்த தவறினால் ராணுவத்தை கூட களம் இறக்குவேன். இது ஆதிக்கம் செலுத்த வேண்டிய நேரம் என தெரிவித்தார்.