ஃபேஸ்புக்கை தோற்கடித்த போக்கிமான் கோ

வெள்ளி, 29 ஜூலை 2016 (13:17 IST)
ஸ்மார்ட்போன் பயனாளர்கள் ஃபேஸ்புக்கை விட போக்கிமால் கோ கேம் விளையாட இரண்டு மடங்கு நேரத்தை செலவிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 


 

 
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட போக்கிமான் கோ என்ற மொபைல் கேம் அனைவரையும் அடிமையாக்கி உள்ளது. இதனால் சாலை விபத்துகளும் அதிக அளவில் இடம் பெறுகின்றன. இந்தியாவிலும் இதற்காக தனி கூட்டம் ஒன்று உருவாகியுள்ளது.
 
இந்நிலையில் போக்கிமான் கோ கேம் பயன்பாடு குறித்த ஆய்வை அமெரிக்காவைச் சேர்ந்த ‘7 பார்க் டேட்டா’ என்ற நிறுவனம்’ நடத்தியது. அதில் ஃபேஸ்புக் பார்க்க 35 நிமிடம் செலவிடுபவர்கள், போக்கிமான் கோ கேம் விளையாட 75 நிமிடம் செலவிடுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
 
இது ஃபேஸ்புக்கில் செலவிடும் நேரத்தை விட இரண்டு மடங்கு போக்கிமான் கோ கேம் விளையாட செலவிடுகிறார்கள். நாடு முழுவதும் போக்கிமான் கோ கேம் அதிக அளவிலான விபரீதங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், அதற்கான பயனர்கள் அதிகரித்து வருகின்றனர். 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்