இசைக்கச்சேரியில் ஐ.எஸ்.ஐ.எஸ் நடத்திய தாக்குதல்.. 60 பேர் பரிதாப பலி.. பிரதமர் மோடி கண்டனம்..!

Mahendran

சனி, 23 மார்ச் 2024 (08:54 IST)
ரஷ்யாவில் நடந்த இசை கச்சேரியில் புகுந்து ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் தாக்குதல் நடத்தியதில் 60 பேர் பரிதாபமாக பலியாகி உள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கு இந்திய பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று ராக் இசை குழுவினர் நடத்திய இசை கச்சேரியில் திடீரென அடையாளம் தெரியாத ஐந்து நபர்கள் உள்ளே புகுந்து சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்

இந்த தாக்குதலில் 60 பேர் பலியானதாகவும் 150 பேர் காயமடைந்ததாகவும் காயம் அடைந்தவர்களின் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த சம்பவத்திற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்திய பிரதமர் மோடி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்திக்கிறேன் என்றும், இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய மக்களுக்கு இந்தியா தனது ஒற்றுமையையும், ஆதரவையும்  தெரிவித்துக் கொள்கிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்