ஆஸ்திரேலியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: நிலவரம் என்ன?

ஞாயிறு, 14 ஜூலை 2019 (16:47 IST)
ஆஸ்திரேலிய நாட்டின் மேற்கு பகுதியில் இன்று மதியம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆஸ்திரேலியா நாட்டின் மேற்கு பகுதியிலுள்ள புரூம் நகரின், இன்று மதியம் ஆஸ்திரேலிய நேரப்படி 03.39 மணியளவில், 165 கி.மீ. தூரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.6 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் பொது மக்கள், பதற்றத்தோடு வீடுகளை விட்டு வெளியே  சாலைக்கு ஓடிவந்தனர். தற்போது வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என தெரிய வருகிறது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தற்போது வரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்