பிரிட்டிஷ் நகரமான ஹல் நகரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆடையின்றி ஊர்வலம் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டிஷ் துறைமுகமாக ஹல் நகரம் உள்ளது. இந்த நகரத்தில் ஆயிரக்கணக்கானோர் ஆடைகளின்றி, தங்கள் உடல்களில் தண்ணீரை குறிக்கும் வகையில் நீல நிற சாயத்தை பூசிக் கொண்டு கலந்து கொண்டனர்.
சீ ஆஃப் ஹல் என்ற தலைப்பின் கீழ் இந்த நிகழ்ச்சியை அமெரிக்க புகைப்பட கலைஞர் ஸ்பென்சர் டுனிக் ஏற்பாடு செய்து இருந்தார்.