செவிலியரை உயிருடன் எரித்து கொன்ற நோயாளி!!

வியாழன், 16 மார்ச் 2017 (10:17 IST)
70 வயது மதிக்க தக்க நோயாளி ஒருவர் தன்னை பார்த்துக்கொள்ள பணி அமைக்கப்பட்டிருந்த செவிலியரை எரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 
 
இஸ்ரேல் தலைநகர் டெல்அவில் பகுதியில் உள்ள ஹோலோன் நகர சுகாதார மையத்தில் 70 வயது நோயாளி ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார்.
 
அவருக்கு தோவா கராரோ (56) என்ற செவிலியர் உதவியாளராக இருந்தார். நோயாளிக்கு தோவா கராரோ மாத்திரை வழங்கி கொண்டிருந்தார்.
 
அப்போது எதிர்பாராத விதமாக நோயாளி எரியும் தன்மை கொண்ட ஒரு திரவத்தை செவிலியர் மீது வீசிவிட்டு காரில் தப்பி ஓடி விட்டார்.
 
இதனால் நர்சு உடலில் தீப்பிடித்து எரிந்தது. உடனே தீயை அணைத்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
 
தப்பி ஓடிய நோயாளி கைது செய்யப்பட்டார். அவர் மனநோய் பாதிக்கப்பட்டவர் என தெரிகிறது. சிகிச்சையில் திருப்தி இல்லாததால் செவிலியரை எரித்துக் கொன்றது விசாரணையில் தெரிய வந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்