’உறவுக்கு மறுக்கும் பெண்களை அடிக்கலாம்’ – இஸ்லாம் மதத் தலைவர் சர்ச்சை கருத்து

சனி, 18 ஜூன் 2016 (14:51 IST)
பாகிஸ்தானில் உடலுறவுக்கு மறுக்கு மனைவியை ஆண்கள் அடித்து கட்டாயப்படுத்தலாம் என்று இஸ்லாமிய சித்தாந்த சபைத் தலைவர் கூறியுள்ளார்.
 

 
கடந்த மாதம் இஸ்லாமிய சித்தாந்த சபை பெண்களுக்கான உரிமைகள் குறித்த வரைவு மசோதா தயாரித்தது. இந்த மசோதாவில் பெண்கள் தங்கள் கணவர்களிடம் உடலுறவுக்கு மறுக்கும் பட்சத்தில் அவர்களை சிறிது அடித்து வற்புறுத்தி கட்டாய உடலுறவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
இதுகுறித்து இஸ்லாமிய சித்தாந்த சபையின் தலைவர் மவுலானா முகம்மது கான் செரானி கூறுகையில், ”பாகிஸ்தானில் 400 பள்ளிக் குழந்தைகள் குண்டு வெடிப்பால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மரண தண்டனை மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.
 

 
மேலும் கருத்தடை விளம்பரங்களுக்கு தடை, பெண்கள் காட்சி விளம்பரங்களில் தோன்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
இதேபோல் பெண்கள் தங்கள் கணவருடன் உடலுறவில் ஈடுபட மறுக்கும் பட்சத்தில் அவர்களை கட்டாயப்படுத்த அவர்களை அடிக்கலாம். இது குர்ரான் மற்றும் சுன்னத் தூதரின் போதனைகளிலும் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
 
இதற்கு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பெண்கள் உரிமை அமைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்