பாலியல் கலச்சாரம் தொடர்பாக கடும் எதிர்பை சந்தித்து வரும் எழுத்தாளர்
வியாழன், 5 மே 2016 (17:35 IST)
கனடா சார்ந்த பாகிஸ்தானி எழுத்தாளர் சஹ்ரா ஹைதர் அமெரிக்க பத்திரிக்கை ஒன்றுக்கு எழுதிய பாலியல் கலாச்சாரம் என்ற கட்டுரையால் சமுக வலைதங்களில் கடுமையான எதிர்பை சந்தித்துள்ளார்.
பாகிஸ்தானிய இளம் பெண்ணாக உடலுறவு கொள்வதில் நான் கற்றுக்கொண்டவை என்ற தலைப்பில் சஹ்ரா ஹைதரால் எழுதப்பட்ட கட்டுரை இஸ்லாமிய சுதந்திரத்தில் உள்ள பாலியல் கலாச்சாரம் பற்றிய செய்திகளை கொண்டது. இதைத்தொடர்ந்து அக்கட்டுரையில், திருமணத்திற்கு முன்பு உடலுறவு தண்டனைக்குரியதாகவும், குடும்பத்தின் மரியாதை தொடர்புடையதாகவும் கருதப்படும் நிலையில் ஆணாதிக்க சமுகத்தில் ஆண்கள் பொதுவாக தண்டனைக்குரியவர்களாக கருதப்படுவதில்லை. ஆனால் நடுத்தர மற்றும் சமுதாயத்தில் பின் தங்கிய குடும்பத்தை சேர்ந்த பெண்கள் திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொள்வது தண்டிக்கப்படுவது நியாயமற்ற ஒன்றாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சஹ்ரா ஹைதர் தனது கட்டுரையில் குறிப்பிட்ட செய்திகளை ஏற்றுக்கொள்ளாத ஒரு சில மக்கள் டுவிட்டரில் சஹ்ரா ஹைதரை மோசமான வார்த்தைகளால் கிண்டல் செய்ததுடன், நாட்டை இழிவு படுத்தியதாகவும், இது அழிவிற்கான அடையாளம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.