பாகிஸ்தான் செல்ல பிரபல நடிகருக்கு விசா மறுப்பு

புதன், 3 பிப்ரவரி 2016 (05:53 IST)
பிரபல இந்தி நடிகர் அனுபம் கெருக்கு பாகிஸ்தான் செல்ல விசா  மறுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
பாகிஸ்தானின் கராச்சி நகரில் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி இலக்கியத் திருவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவில், கலந்து கொள்ள, இந்தியாவில் உள்ள இந்தி நடிகர் அனுபம் கெர், நடிகை நந்திதா தாஸ் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் உள்பட 18 பேருக்கு விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.
 
இதை ஏற்று, அங்கு செல்ல 18 பேரும் விசா கோரி விண்ணப்பம் செய்தனர். இதில், நடிகர் அனுபம் கெர் தவிர மற்ற அனைவருக்கும் பாக்கிஸ்தான் அரசு விசா வழங்கியுள்ளது.
 
நான் ஒரு காஷ்மீர் பண்டிட் என்பதால் விசா மறுக்கப்பட்டுள்ளது என நடிகர் அனுபம் கெர் கருத்து தெரிவித்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்