50 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிப்பா? ஒ.எஸ்.மணியன் விளக்கம்

ஞாயிறு, 22 அக்டோபர் 2017 (16:43 IST)
பொறையாரில் சமீபத்தில் பேருந்து பணிமனை கட்டிடம் இடிந்து 9 பேர் பலியாகினர். ஏற்கனவே கோவை சோமனூரில் பேருந்து நிலையம் இடிந்தும் உயிர்ப்பலி ஆகியுள்ளது. இந்த நிலையில் நாகையில் உள்ள தீயணைப்பு கட்டிடத்தில் விரிசல் விழுந்துள்ளதாகவும் எந்த நேரத்திலும் அந்த கட்டிடம் இடிந்துவிழும் அபாயம் இருப்பதாகவும் ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது.



 
 
இந்த நிலையில் பழைய கட்டிடங்களை அதாவது  50 ஆண்டுகள் பழமையான கட்டடங்கள் இடித்து தள்ளப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
 
இன்று நாகையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், 50 ஆண்டுகள் பழமையான கட்டடங்களில் பழுது ஏற்பட்டிருந்தால், உரிய ஆய்வு மேற்கொள்ளப்படும். தேவை ஏற்படும் உடனடியாக இடித்து தள்ளப்படும்' என்று கூறியுள்ளார். எனவே விரைவில் பல கட்டிடங்கள் இடித்து தள்ள வாய்ப்பு உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்