டார்லிங் நதியில் டேரிங் சம்பவம்: ஷாக் பின்னணி

புதன், 30 ஜனவரி 2019 (18:56 IST)
ஆஸ்திரேலியாவில் உள்ள டார்லிங் நதியில் கோரமான சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்த பின்னணி அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான செய்தி பின்வருமாறு...  
 
பல ஆயிரம் கிமீ நீளும் இந்த நதி மீன்கள் மற்றும் பல நீர்வாழ் உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. ஆனால், சமீபத்தில் இந்த நதியில் உள்ள மீன்கள் செத்து மிதந்தன. இது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள், 
 
ஆஸ்திரேலியாவில் வறட்சி காரணமாக நதியில் உள்ள மீன்கள் இறந்துள்ளன. வெப்பநிலை மாற்றம் மற்றும் ஆக்ஸிஜன் அளவு குறைந்து ஆல்கா நச்சாக மாறியதால், மீன்கள் சுவாசிக்க இயலாமல் இறந்துள்ளன என கூறியுள்ளனர். 
 
மேலும், அங்கு ஏற்பட்டுள்ள கடுமையான வெப்பநிலை காரணமாக 40-க்கும் மேற்பட்ட குதிரைகள் இறந்துள்ளன. கடந்த 1939 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆஸ்திரேலியாவில் இப்போதுதான் இதுபோன்று வெயில்கொளுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்