2200 கலைமான்களை கொல்ல நார்வே அரசு அதிரடி முடிவு

செவ்வாய், 9 மே 2017 (05:58 IST)
கலைமான்கள் என்ற விலங்கை உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பொக்கிஷம் போல் பாதுகாத்து வரும் நிலையில் நார்வே நாட்டின் அரசு 2200 கலைமான்களை கொல்ல முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.



 


அமெரிக்காவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்டிப்படைத்த 'க்ரோனிக் வேஸ்டிங் டிஸீஸ்' என்ற நோய் தற்போது நார்வேயில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் கலைமானின் எச்சிலில் இருந்து மிக வேகமாக மனிதர்களுக்கு பரவுவதால் போர்க்கால நடவடிக்கையாக, நார்வேயின் நோர்ஜெல்லா மலைப்பகுதியில் இருக்கும் 2,200 கலைமான்களைக் கொல்வதற்கு அந்நாட்டு அரசு முடிவுசெய்துள்ளது.

ஆனாலும் இந்த எண்ணிக்கை நார்வேயில் உள்ள மொத்த கலைமான்களின் எண்ணிக்கையில் 10% தான் என்பது குறிப்பிடத்தக்கது. 'க்ரோனிக் வேஸ்டிங் டிஸீஸ்' நோயை தடுப்பது எப்படி என்பதற்காக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் பேரிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நார்வே அரசு அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்