வடகொரியாவை சீனா தான் முதலில் தாக்கும்: அமெரிக்கா!!

வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (16:13 IST)
வடகொரியாவின் தொடர் அணு ஆயுத ஏவுகணை சோதனை தொடர்பாக அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கு இடையே பதற்ற நிலை நிலவுகிறது.


 
 
இந்நிலையில் வடகொரியா இனி அணு ஆயுத சோதனை நடத்தினால் சீனா நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
அணு ஆயுத சோதனை தொடர்பாக சீனா வடகொரியாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. மேலும் சோத்னை நடத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. 
 
இதையும் மீறி அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தினால் சீனா தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுருத்தி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்