இந்நிலையில் கொரோனா பரவலின் போது வீட்டில் இருந்து வேலை பார்க்கும் முறையை டெல் நிறுவனம் அறிமுகப்படுத்திய நிலையில் இன்னும் சில ஊழியர்கள் அலுவலகத்திற்கு வராமல் இருப்பதாகவும், எனவே அனைத்து ஊழியர்களும் அலுவலகத்திற்கு வரவேண்டும் என டெல் நிறுவனம் அறிவுறுத்தி வருகிறது
இந்த நிலையில் வீட்டிலிருந்து பணி செய்யும் ஊழியர்கள் அல்லது ஹைப்பிரிட் முறையில் வீட்டிலும் அலுவலகத்திலும் வந்து மாறி மாறி பணி புரிந்து வருபவர்களுக்கு பதவி உயர்வு கிடையாது என டெல் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அனைத்து ஊழியர்களும் இனி அலுவலகம் வந்து பணிபுரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது