இந்தியாவில் சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியை "காலிஸ்தான்" என்ற பெயரில் தனிநாடு உருவாக்க வேண்டும் என்று சில தீவிரவாத அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இவை அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, அமெரிக்காவில் தலைமையிடமாக செயல்படும் இந்த அமைப்பு, பல்வேறு போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நியூசிலாந்து தலைநகரில் காலிஸ்தான் ஆதரவாளர்களின் பேரணி நடைபெற்றது.
"உங்கள் போராட்டங்களை எங்கள் நாட்டில் ஏன் நடத்த வேண்டும்? நியூசிலாந்து நாட்டிற்கு நீங்கள் வெளிநாட்டினராக உள்ளீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். நியூசிலாந்துக்காக எங்கள் ராணுவ வீரர்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். இந்நாட்டில் காலிஸ்தான் கொடியை ஏந்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நீங்கள் உடனடியாக சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்லுங்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த எச்சரிக்கை காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.