பூமியிலிருந்து 25 ஆயிரம் ஒளி ஆண்டு தூரத்தில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு

வெள்ளி, 17 அக்டோபர் 2014 (15:57 IST)
சூரிய குடும்பத்தில் இருக்கும் கிரகங்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது செய்திகளாக வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் யுரேனஸ் போன்று புதிய கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
யுரேனஸ், நெப்டியூன் போன்ற கிரகங்கள் ராட்சத ஐஸ் கிரகங்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றில் ஹைட்ரஜன் மற்றும் ஹுலியம் வாயுக்கல் நிறைந்துள்ளது. மேலும் அக்கிரங்கள் நீலநிற தோற்றத்தில் காணப்படும்.
 
இந்நிலையில் பூமியில் இருந்து சுமார் 25 ஆயிரம் ஒளி ஆண்டு தூரத்தில் உள்ள ஒரு புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அதன் அமைப்பு யுரேனஸ் கிரகம் போன்று உள்ளது என ஒகியோ மாகாண விண்வெளி ஆராய்ச்சி பேராசிரியர் ஆண்ட்ரூ குட் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்