இந்தியா நிலவுக்கு செல்கிறது, பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்..!

புதன், 20 செப்டம்பர் 2023 (17:45 IST)
இந்தியா நிலவுக்கு விண்கலத்தை அனுப்பிம, ஜி 20 மாநாடுகளை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் பாகிஸ்தான் ஒவ்வொரு நாடாக சென்று நிதி உதவி கேட்டு பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு தற்காலிக பிரதமராக லுசிஸ்தான் எம்.பி. அன்வர் உல் ஹக் கக்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் 
இந்த நிலையில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர்  நவாஸ் ஷெரீப்  கூட்டம் ஒன்றில் பேசியபோது ’இந்தியா நிலவை அடைந்தும் ஜி 20 உச்சி மாநாடு கூட்டங்களை நடத்தி கொண்டிருக்கும்போது பாகிஸ்தான் பிரதமர் ஒவ்வொரு நாடாக சென்று நிதிக்காக பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். 
 
இந்தியா அடைந்த சாதனைகளை பாகிஸ்தான் ஏன் அடைய முடியவில்லை இதற்கு யார் பொறுப்பு? வாஜ்பாய் இந்தியாவின் பிரதமராக இருந்தபோது
 
வாஜ்பாய்பிரதமராக  இருந்தபோது, இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பு வெறும் ஒரு பில்லியன் டாலர் மட்டுமே. ஆனால் தற்போது இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 600 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
 
 இந்தியா இன்றைக்கு எங்கேயோ சென்றுவிட்டதும் ஆனால், பாகிஸ்தான் உலக நாடுகளிடம் நிதிக்காக கையேந்திக் கொண்டிருக்கிறது என நவாஸ் ஷெரீப் பேசினார்.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்