18 ஆண்டுகளுக்கு முன் உடைந்த பனிக்கட்டியின் நிலை என்ன?
செவ்வாய், 12 ஜூன் 2018 (11:45 IST)
18 ஆண்டுகளுக்கு முன்னர் அப்டார்டிகா கடலில் உடைந்த மலை அளவு பெரிய பனிக்கட்டி தற்போது உருகி வருவதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது.
அன்டார்டிகா கண்டத்தில் முழுவதும் பனிமலைகள்தான் உள்ளது. அனால், இந்த பனிமலைகள் புவி வெப்பமயமாதலால் உருகி வருகின்றன. பனிமலைகள் உருகுவதால் கடல் நீர் மட்டமும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 2000 ஆம் ஆண்டு அன்டார்டிகாவில் மலை அளவுக்கு பனிக்கட்டி உடைந்து பிரிந்தது. இதன் நீளம் 296 கிமீ, அகலம் 37 கிமீ ஆகும். இது உலகின் மிகப்பெரிய பனிமலை என கூறப்பட்டது.
இதற்கு பி15 என்று பெயரிடப்பட்டது. இந்த பி15 பனிமலை உடைந்த பின்னர் கடலில் மிதந்து செல்ல துவங்கியது. தற்போது இது மேலும் உடைந்து 4 துண்டுகள் மட்டும் கடலில் மிதந்து வருகிறது.
இது குறித்து நாசா பின்வருமாறு தகவலை வெளியிட்டுள்ளது. பி15 பனிக்கட்டி கண்காணிக்கும் அளவுக்கு இன்னும் பெரிய உருவத்தில்தான் இருக்கிறது. ஆனால் இப்போது பனிமலையின் நடுவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. அதன் முனைகளும் சிறு சிறு துண்டுகளாகி வருகின்றன. எனவே இந்த பனிமலை உருகி காணாமல் போகும் என தெரிவித்துள்ளது.