பூமியை வேற்றுகிரகவாசிகளிடம் இருந்து பாதுகாக்கும் அதிகாரியை நாசா நியமிக்க உள்ளதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் நியூ ஜெர்சியை சேர்ந்த ஜேக் டேவிஸ் என்ற சிறுவன் பூமியை பாதுகாக்கும் அதிகாரி பணிக்கு விண்ணபித்துள்ள சம்பவம் நடைப்பெற்றுள்ளது. இதற்கு நாசா அந்த சிறுவனுக்கு பதிலளித்துள்ளது. அதை நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
என் பெயர் ஜேக் டேவிஸ், என் சகோதரி என்னை ஏலியன் என்று அழைப்பார். பூமியின் பாதுகாப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறேன். எனக்கு வயது வேண்டுமானால் 9 இருக்கலாம் ஆனால், இந்தப் பணிக்கு பொருத்தமாக இருப்பேன் என எழுதி நாசாவிற்கு அனுப்பியுள்ளான்.
இதற்கு நாசா எழுதிய பதில் கடிதத்தில், டியர் ஜேக், உன் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள். இந்த பதவி மிகவும் முக்கியமானது. சந்திரன், விண்கற்கள் மற்றும் செவ்வாய் கிரகத்தில் இருந்து சில மாதிரிகள் மீண்டும் கொண்டு வரும்போது, சிறிய நுண்ணுயிரிகளிலிருந்து பூமியைப் பாதுகாப்பது அவசியம். இதற்கு நாங்கள் கைதேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களை நியமிக்க உள்ளோம்.