குறைந்த காற்று மாசுபாடு: நாசா வெளியிட்ட புகைப்படம்!

ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (10:29 IST)
ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளதால் உலகளவில் காற்று மாசுபாடு கணிசமாக குறைந்துள்ளதாக நாசா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்புகள் உலக அளவில் அதிகரித்துள்ளதால் பல நாடுகள் ஊரடங்கை அறிவித்துள்ளன. இதனால் சாலையில் வாகன போக்குவரத்து இன்றி உலகமே முடங்கியுள்ளது. பல்வேறு தொழிற்சாலைகளும் செயல்படாமல் இருக்கின்றன.

இதனால் உலகில் காற்று மாசுபாடு வெகுவாக குறைந்துள்ளதை காட்டும் புகைப்படம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது. வடகிழக்கு அமெரிக்காவில் நாசா செயற்கைகோள் வழியாக எடுத்த அந்த தரவுகளின் படி கிட்டத்தட்ட 30 சதவீதம் அமெரிக்காவில் காற்று மாசுபாடு குறைந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்