செவ்வாய் கிரகத்தில் மலைக் குன்று, பாறைகள் இருந்ததற்கான புகைப்படங்கள் வெளியீடு

செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (10:55 IST)
செவ்வாய் கிரகத்தில் முதன் முறையாக மலைக் குன்று ஒன்றினையும், அங்கு சிதைவடைந்த பாறைகள் இருப்பதாகவும் புகைப்படம் வெளியாகி உள்ளது.


 
 
பூமியில் இருந்து 57 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது செவ்வாய் கிரகம். இது பூமி கிரகத்தைப் போன்றதாகும். இது நுண்ணுயிரிகள் வாழ ஏற்ற கிரகமாக பார்க்கப்படுகிறது. இந்த செவ்வாய் கிரகத்தைப் பற்றிய ஆராய்ச்சியை பல நாடுகள் மேற்கொண்டுள்ளன. 
 
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’, செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை ஏவியது. இந்த விண்கலம் 2012ல் செவ்வாய் கிரகத்தின் தரையிறங்கியது. 2013ல்  இருந்து செவ்வாய் கிரகத்தில் பல்வேறு படங்களை எடுத்து அனுப்ப தொடங்கியது. 
 
தற்போது விஞ்ஞானிகள் எதிர்பாராத வகையில் முதன் முறையாக மலைக் குன்று ஒன்றினையும், அங்கு சிதைவடைந்திருக்கும் பாறைகளையும் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.
 
மலைக் குன்றின் அடிவாரத்தில் இருந்து இப்புகைப்படங்ளை ரோவர் விண்கலம் எடுத்துள்ளது. இக்குன்றுகள் செவ்வாய் கிரகத்தின் தென்மேற்கு பகுதியில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இவை 2 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றி இருக்கலாம் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்