உலக அளவில் உயர்ந்து கொண்டே போகும் கொரோனா பாதிப்பு: 27 லட்சத்தை தாண்டியது

வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (08:07 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் உலகம் முழுவதும் நேற்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் இன்று 27 லட்சத்திற்கும் அதிகமாகிவிட்டது. ஒவ்வொரு நாளும் சராசரியாக ஒரு லட்சம் என்ற விகிதத்தில் உலகம் முழுவதும் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
 
இந்த நிலையில் உலகம் முழுவதும் 2,718,699 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்தாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 190,654 என்றும், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 745,620 என்றும் உலக சுகாதார மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது.
 
அமெரிக்காவில் மட்டும் 880,204 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், அதேபோல் கொரோனாவுக்கு 49,845 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவை அடுத்து ஸ்பெயினில் 213,024 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தாலியில் 189,973 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரான்ஸில் 158,183 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஜெர்மனியில் 153,129 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,039 என்பதும், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 721 என்பதும் குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்