கரும்புவயலில் தெளிக்கப்பட்ட பூச்சுக்கொல்லி மருந்து : 92 குழந்தைகள் பலி

வெள்ளி, 20 மே 2016 (16:47 IST)
பெரு நாட்டின் வடபகுதியில் உள்ள நெபெனா நகரில் ஒரு உணவு பொருள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்திற்கு சொந்தமான கரும்பு வயலில், விமானம் மூலம் பூச்சுக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டது.


 

 
பொதுவாக, இப்படி மருந்து தெளிக்கும்போது அருகிலிருப்பவர்கள் வெளியேற்றப்பட வேண்டும். அதேபோல், நெபேனா நகராட்சியிடம் அனுமதி பெறவேண்டும். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 
இதனால் அந்த வயலுக்கு அருகில் இருந்த பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள், அந்த மருந்தை சுவாசித்து மயங்கி விழுந்தனர். பலருக்கு வாந்தி, தலைவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 
 
ஆனால், சிகிச்சை பலனின்றி 92 குழந்தைகள் மற்றும் 3 ஆசிரியர்கள் பரிதாபமாக பலியாகினர். இன்னும் சிலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்த துயர சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.  அந்த நிர்வாகம் தெளித்த பூச்சுக்கொல்லி மருந்து, ஏற்கனவே அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட ஒன்று என்பது தெரியவந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்